செய்திகள்
கொரோனா வைரஸ்

சேலம் மாவட்டத்தில் கொரோனா உயிரிழப்பு 1649 ஆக உயர்வு

Published On 2021-09-15 06:14 GMT   |   Update On 2021-09-15 06:14 GMT
சேலம் மாவட்டம் முழுவதும் இதுவரை 16 லட்சத்து 23 ஆயிரத்து 660 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
சேலம்:

சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 96 ஆயிரத்து 947 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது ஆஸ்பத்திரிகளில் 595 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 94 ஆயிரத்து 703 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஏற்கனவே 1646 பேர் இறந்த நிலையில் தற்போது கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1649 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டம் முழுவதும் இதுவரை 16 லட்சத்து 23 ஆயிரத்து 660 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 5 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாகவும், 153 வீடுகள் தனிமைபடுத்தப்பட்டு அதில் வசிக்கும் 452 பேர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News