செய்திகள்
பேபி ராணி மவுரியா

உத்தரகாண்ட் மாநில கவர்னர் ‘திடீர்’ ராஜினாமா

Published On 2021-09-09 02:10 GMT   |   Update On 2021-09-09 02:10 GMT
இன்னும் 2 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ள நிலையில், பேபி ராணி மவுரியா பதவி விலகி இருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டேராடூன் :

உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்-மந்திரி புஷ்கர்சிங் தாமி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.

இந்த மாநிலத்தின் 7-வது கவர்னராக 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ந் தேதி முதல் பதவி வகித்து வந்தவர் பேபி ராணி மவுரியா (வயது 65). இவர் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு இவர் அனுப்பி வைத்துள்ளதாக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர் மார்கரெட் ஆல்வாவுக்கு பின்னர் அந்த மாநிலத்தில் பதவி வகித்த 2-வது பெண் கவர்னர் ஆவார்.

இன்னும் 2 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ள நிலையில், பேபி ராணி மவுரியா பதவி விலகி இருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவர் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
Tags:    

Similar News