ஆட்டோமொபைல்
2020 பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ் ஹைப்ரிட்

சர்வதேச சந்தையில் 2020 பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ் ஹைப்ரிட்

Published On 2019-08-17 11:43 GMT   |   Update On 2019-08-17 11:43 GMT
பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் 2020 3 சீரிஸ் ஹைப்ரிட் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் சிறப்பம்சங்களை பார்ப்போம்.



ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபுள்யூ. தனது வாகனங்களில் ஹைப்ரிட் ரகங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் முன்னதாக 7 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் ஹைப்ரிட் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ் கார் பிளக்-இன் ஹைப்ரிட் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

745இ (7 சீரிஸ் ஹைப்ரிட்) ஏற்கனவே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விட்ட நிலையில், 3 சீரிஸ் பிளக்-இன் ஹைப்ரிட் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இது இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பி.எம்.டபுள்யூ. 330இ ஹைப்ரிட் மாடலில் 2.0 லிட்டர், 4-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஒற்றை எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இது 249 பி.ஹெச்.பி. பவர், 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. இது கன்வெஷனல் வேரியண்ட்டில் உள்ளதை விட 15எம்.எம். உயரமானதாகும்.



இந்த என்ஜின் 182 பி.ஹெச்.பி. திறனும், எலெக்ட்ரிக் மோட்டார் கூடுதலாக 111 ஹெச்.பி. வேகம் கிடைக்கும். இதன் ஸ்போர்ட்ஸ் மோட் மேலும் அதிகமாக 39 ஹெச்.பி. திறன் வழங்குகிறது. இது 10 நொடிகளில் 288 பி.ஹெச்.பி. திறனை வழங்கிவிடும். 

பி.எம்.டபுள்யூ. 330இ மாடல் லிட்டருக்கு 52.63 கிலோமீட்டரில் இருந்து 62.5 கிலோமீட்டர் வரை செல்லும் என பி.எம்.டபுள்யூ. தெரிவித்துள்ளது. புதிய 330இ மாடல் அதிகபட்சம் மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியதாகும். எனினும், இது மணிக்கு 110 கிலோமீட்டர் வரை மட்டும் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News