செய்திகள்
இன்னிசை நிகழ்ச்சி

மனதை மயக்கும் கலைநிகழ்ச்சிகளுடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய தெற்கு புளோரிடா தமிழ் சங்கம்

Published On 2021-04-25 10:28 GMT   |   Update On 2021-04-25 16:53 GMT
புத்தாண்டு விழா இன்னிசை நிகழ்ச்சியில், மக்களின் மனதில் நீங்காத இடம்பிடித்திருக்கும் பல்வேறு தமிழ் சினிமா பாடல்களை பாடி அசத்தினர்.
புளோரிடா:

அமெரிக்காவின் தெற்கு புளோரிடா தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் சங்க தலைவர் ஹரி முத்துசாமி அறிமுகம் செய்து வரவேற்றார். 

இவ்விழாவில், கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம் மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மக்களின் மனதில் நீங்காத இடம்பிடித்திருக்கும் பல்வேறு தமிழ் சினிமா பாடல்களை, பாடகர்கள் இனிமையான குரலில் பாடி அசத்தினர். வாத்தி கமிங் பாடலுக்கு குட்டீஸ்களின் குழு நடனம் அனைவரையும் கவர்ந்தது.



குறிப்பாக கொரோனா காலத்தில் அதிகமாக அவதிப்படுவது கணவனா? மனைவியா என்ற தலைப்பில் நடுவர் வெங்கட் ரங்கமணி தலைமையில் நடந்த பட்டிமன்றம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. அதிகம் அவதிப்படுவது மனைவிமார்களே என்ற அணியில், சங்கத்தின் முன்னாள் தலைவி ஜானவி, லலிதா கணேஷ், தொகுப்பாளினி எம்.சி.சூர்யா ஆகியோர் பேசினர். அதிகம் அவதிப்படுவது கணவன்மார்களே என்ற தலைப்பில் டிஜே மகா, சங்க தலைவர் ஹரி, டாக்டர் மோகன் ஆகியோர் பேசினர். 



விழாவின் நிறைவில் சங்க இணை செயலாளர் உமா தியாகராஜன் நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியை யாமிகா ரமேஷ் தொகுத்து வழங்கினார்.
Tags:    

Similar News