ஆன்மிகம்
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில்

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்

Published On 2020-11-18 08:26 GMT   |   Update On 2020-11-18 08:26 GMT
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 1,008 சங்குகளில் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை அருகே திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை மாத முதல் சோமவாரத்தையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலை வகித்தார். 1,008 சங்குகளில் திரவியங்கள், பழவகைகள், தானிய வகைகள் போன்றவற்றை நிரப்பி சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கொள்ளிடம் அருகே வடரங்கம் ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை முதல் சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷகம் நடைபெற்றது. முன்னதாக ஆலயத்துக்கு முன்புறம் சிவலிங்க வடிவில் 108 சங்குகள் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. சிறப்பு யாகம் முடிவுற்றதும் 108 சங்குகளில் உள்ள புனித நீரால் ஜம்புகேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் 27 மூலிகை பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில் சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் முக கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News