செய்திகள்
உழவு செய்யப்பட்ட விவசாய நிலங்கள்.

உடுமலை பகுதியில் உழவுப்பணிகள் தீவிரம்

Published On 2021-06-08 06:31 GMT   |   Update On 2021-06-08 06:31 GMT
உடுமலை பகுதிகளில் தென்மேற்கு பருவமழையை எதிர்பார்த்துள்ள விவசாயிகள் உழவு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
உடுமலை:

உடுமலை பகுதிகளில் இரண்டு லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தாண்டு குளிர் கால மழையும், கோடை மழையும் போதிய அளவு பெய்யாத நிலையில் தற்போது தென்மேற்கு பருவ மழை காலம் துவங்கியுள்ளது. இதனால் மானாவாரி நிலங்களில்  மக்காச்சோளம், தானிய பயிர்கள் மற்றும் இறவை பாசன நிலங்களில் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.

இதுகுறித்து வேளாண்துறை அதிகாரிகள் கூறுகையில் ‘பருவமழைக்கு முன் உழவு செய்யும் போது நிலத்தில் அதிக காற்றோட்டம் ஏற்பட்டு, மண்ணிலுள்ள பூச்சிக்கொல்லி மருந்துகளின் எஞ்சிய நஞ்சுகள் சிதைக்கப்படுகிறது. மேலும்  காற்று மண்டலத்திலுள்ள நைட்ரஜன், மழை நீருடன் சேர்ந்து மண்ணிற்குள் செல்வதால் பயிர் சாகுபடிக்கு ஏற்ற வகையில் மண்ணின் வளம் பெருகும் என்பதால் தற்போது உழவு பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர் என்றனர்.
Tags:    

Similar News