ஆன்மிகம்
திருநீற்றுப் பட்டை

திருநீற்றுப் பட்டை

Published On 2021-09-23 04:51 GMT   |   Update On 2021-09-23 04:51 GMT
திருநீற்றுப் பட்டை அடிக்க பயன்படுத்தும் மூன்று விரல்களும், ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தின் வடிவமாக பார்க்கப்படுகிறது. வேதங்கள் மட்டுமின்றி, மேலும் பல பொருட்களும் அந்த மூன்று திருநீற்று பட்டைகளில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவற்றுள் சில..
சிவாலயங்களுக்குச் செல்லும் பலர், கோவிலில் இறை தரிசனம் முடிந்ததும் தரும் விபூதியை வாங்கி, நெற்றியில் மூன்று விரல்களால் நீண்ட கோடுகளை பூசிக்கொள்வார்கள். இதற்கு ‘திருநீற்றுப் பட்டை’ என்று பெயர். நாம் பட்டை அடிக்க பயன்படுத்தும் மூன்று விரல்களும், ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தின் வடிவமாக பார்க்கப்படுகிறது. ஆட்காட்டி விரலால் இடப்படும் கோடு ‘ரிக்வேதம்’, நடுவிரல் கொண்டு இடும் கோடு ‘யஜூர் வேதம்’, மோதிரவிரலால் இடும் கோடு ‘சாமவேதம்’ ஆகிய மூன்று வேதங்களைக் குறிக்கிறது.

வேதங்கள் மட்டுமின்றி, மேலும் பல பொருட்களும் அந்த மூன்று திருநீற்று பட்டைகளில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவற்றுள் சில..

* பிரம்மா, விஷ்ணு, சிவன்,

* சிவன், சக்தி, கந்தர்

* அறம், பொருள், இன்பம்

* குரு, லிங்கம், சங்கமம்

* படைத்தல், காத்தல், அழித்தல்.
Tags:    

Similar News