தொழில்நுட்பம்
போட் ஸ்டாம் ஸ்மார்ட்வாட்ச்

குறைந்த விலையில் போட் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

Published On 2020-10-29 05:56 GMT   |   Update On 2020-10-29 05:56 GMT
போட் நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை போட் ஸ்டாம் எனும் பெயரில் அறிமுகம் செய்து உள்ளது.


இந்திய சந்தையில் நுகர்வோர் மின்சான பொருட்களை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனம் போட். இந்நிறுவனம் இந்திய பிட்னஸ் சந்தையில் தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. புதிய ஸ்மார்ட்வாட்ச் போட் ஸ்டாம் என அழைக்கப்படுகிறது. 

போட் ஸ்டாம் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 1.3 இன்ச் வளைந்த டிசைனில் தொடுதிரை ஸ்கிரீன் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இதய துடிப்பு, எஸ்பிஒ2 மாணிட்டரிங், பல்வேறு ஸ்போர்ட்ஸ் மோட்கள், 5ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன.



இந்த ஸ்மார்ட்வாட்ச் மெட்டல் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. போட் ப்ரோ-கியர் ஆப் மூலம் இந்த வாட்ச்சிற்கு பல்வேறு கஸ்டமைசேஷன் வசதிகள் வழங்கப்படுகின்றன. இதை கொண்டு பயனர்கள் 100-க்கும் அதிகமான கிளவுட் சார்ந்த வாட்ச் பேஸ்களை டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம். 

ஸ்டாம் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் எஸ்பிஒ2 வசதி, 24x7 இதய துடிப்பு டிராக்கிங், 9 பில்ட் இன் ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் உள்ள 210 எம்ஏஹெச் பேட்டரி 10 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்குகிறது. ஆக்டிவ் பிளாக், பிளாக் மற்றும் புளூ என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1999 ஆகும்.
Tags:    

Similar News