இந்தியா
கொரோனா தடுப்பூசி

நாட்டில் 50 சதவீதத்துக்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தியது முக்கிய மைல்கல் - பிரதமர் நெகிழ்ச்சி

Published On 2021-12-06 22:46 GMT   |   Update On 2021-12-06 22:47 GMT
இந்தியாவில் 85 சதவீத தகுதிவாய்ந்த பொதுமக்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில், இந்தியா தகுதியான மக்களில் 50 சதவீதத்துக்கும் கூடுதலானோர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இது மிகவும் பெருமைக்குரிய தருணம். கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் ஒன்றாக வெல்வோம் என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்தியாவில் 50 சதவீதத்துக்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டது முக்கிய மைல்கல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில், இந்தியாவின் தடுப்பூசி பணி மற்றொரு முக்கியமான மைல்கல்லை கடந்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரை வலுப்படுத்த இந்த உத்வேகத்தை தொடர்ந்து கடைபிடிப்பது மிகவும் முக்கியம். முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை பின்பற்றுங்கள் என  கூறியுள்ளார்.

Tags:    

Similar News