செய்திகள்
மூடிக்கிடக்கும் மார்கெட்

மகாராஷ்டிராவில் ஆளுங்கட்சிகள் பந்த்: கடைகள் அடைப்பு, போக்குவரத்து தடையால் மக்கள் பாதிப்பு

Published On 2021-10-11 06:29 GMT   |   Update On 2021-10-11 06:29 GMT
லக்கிம்பூர் வன்முறையில் 4 விவசாயிகள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ், சிவசேனா, என்.சி.பி. கட்சிகள் போராட்டம் அறிவித்தன.
உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் நடந்த வன்முறையில் நான்கு விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இதில் இரண்டு விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்டனர். இதற்கு இந்தியா முழுவதிலும் இருந்து கண்டனக்குரல் எழுப்பப்பட்டன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து ஆட்சி செய்து வருகின்றன. இந்த கட்சிகள் இன்று லக்கிம்பூர் வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்த முடிவு செய்தன.

அதன்படி இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் கடைஅடைப்பு போராட்டம் (பந்த்) நடைபெற்று வருகிறது. ஆளுங்கட்சி பந்த் என்பதால் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.



புனே பகுதியில் உள்ள ஏ.பி.எம்.சி. மார்கெட் அடைக்கப்பட்டிருந்தது. மார்கெட் வணிகர்கள் கடைகளை அடைக்க முடிவு செய்தனர். இதுகுறித்து முன்னதாகவே விவசாயிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்று மார்ககெட் நிர்வாகி தெரிவித்தார்.

மும்பையில் சில இடங்களில் அரசு பேருந்து மீது கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது. பேருந்து கிடைக்காமல் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.

Tags:    

Similar News