ஆன்மிகம்
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வழங்கப்பட்ட அலங்கார குடைகளை படத்தில் காணலாம்.

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு 5 புதிய குடைகள்

Published On 2019-12-31 05:52 GMT   |   Update On 2019-12-31 05:52 GMT
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு 5 புதிய குடைகளை சிவனடியார் திருக்கூட்டம் அமைப்பு வழங்கியது.
சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி ஆருத்ரா தரிசனம் மற்றும் ஆனித்திருமஞ்சனம் நடைபெறும். இந்த விழாக்களில் பஞ்சமூர்த்திகளான சோமாஸ்கந்தர், சிவானந்த நாயகி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் வீதிஉலா செல்லும்போது அலங்கார குடைகளை தீட்சிதர்கள் பிடித்து செல்வது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசனவிழா நாளை (புதன் கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில் சிகர நிகழ்ச்சிகளான தேரோட்டம் வருகிற 9-ந்தேதியும், ஆருத்ரா தரிசனம் 10-ந்தேதியும் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா செல்ல ஏதுவாக சிவனடியார் திருக்கூட்டம் அமைப்பு சார்பில் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் புதிதாக வாங்கப்பட்ட 5 அலங்கார குடைகள் வழங்கும் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நடந்தது. இதில் சிவனடியார் திருக்கூட்டம் அமைப்பினர் 5 அலங்கார குடைகளையும் நடராஜர் கோவில் பொதுதீட்சிதர்களிடம் வழங்கினர். முன்னதாக புதிதாக வாங்கப்பட்ட 5 குடைகளும் நேற்று முன்தினம் வெள்ளோட்டமாக தேரோடும் நான்கு வீதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்டு கோவிலில் ஒப்படைக்கப்பட்டது.
Tags:    

Similar News