செய்திகள்
மகாராஷ்டிரா ஆளுநரை சந்தித்த பட்னாவிஸ்

மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பதில் குழப்பம்- ஆளுநரை சந்தித்தார் தேவேந்திர பட்னாவிஸ்

Published On 2019-10-28 06:32 GMT   |   Update On 2019-10-28 06:32 GMT
மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆளுநரை இன்று சந்தித்தார்.
மும்பை:

288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு கடந்த 21-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 145 இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும்.

ஆளும் பாரதிய ஜனதா-சிவசேனா கூட்டணி 161 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைப்பதற்கான தகுதியை பெற்றது. இந்த கூட்டணியில் 164 இடங்களில் போட்டியிட்ட பாரதிய ஜனதா 105 இடங்களில் வெற்றி பெற்றது. 124 தொகுதிகளில் போட்டியிட்ட சிவசேனாவுக்கு 56 இடங்கள் கிடைத்தன.

காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 98 இடங்களை கைப்பற்றியது. இந்த அணியில் 147 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரசுக்கு 44 இடங்களும், 121 தொகுதிகளில் போட்டியிட்ட சரத்பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு 54 இடங்களும் கிடைத்தன.

பிற கட்சிகளுக்கு 16 இடங்கள் கிடைத்தன. 13 தொகுதிகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

புதிய அரசை அமைப்பதற்கான பெரும்பான்மை பலம் பாரதிய ஜனதா-சிவசேனா கூட்டணிக்கு இருந்தபோதிலும், ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டு உள்ளது. முதல்-மந்திரி பதவியை யார் வகிப்பது? ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை மந்திரி பதவிகள்? என்று முடிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.

இதற்கிடையில், மகாராஷ்டிர பாஜக தலைவரும் தற்போதைய முதல்மந்திரியும் உள்ள தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் சிவசேனா கட்சி திவாகர் மாநில ஆளுநரை இன்று தனித்தனியே சந்திக்க உள்ளனர்.

ஆளுநருக்கு தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவிக்கவே இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாக இரு கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் தெரிவித்துவரும் நிலையில் மாநிலத்தில் ஆட்சியமைப்பதற்கு உரிமை கோரலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநில முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை இன்று சந்தித்தார்.

இதற்கிடையே புதிய அரசு அமைப்பதில் பா. ஜனதா-சிவசேனா கூட்டணியில் இழுபறி நிலை நீடிப்பதால் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. 
Tags:    

Similar News