தொழில்நுட்பம்
கேலக்ஸி எம்21

ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் இரு சாம்சங் ஸ்மார்ட்போன்கள்

Published On 2021-01-29 08:30 GMT   |   Update On 2021-01-29 08:30 GMT
சாம்சங் நிறுவனத்தின் இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படுகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்21 மற்றும் கேலக்ஸி எப்41 ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒன்யுஐ 3.0 அப்டேட் வழங்க துவங்கி உள்ளது. முந்தைய தகவல்களின் படி கேலக்ஸி எம்21 மாடலுக்கு இந்த அப்டேட் மார்ச் மாத வாக்கில் வழங்கப்பட இருந்தது. எனினும், முன்கூட்டியே இந்த அப்டேட் வழங்கப்படுகிறது.

கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனிற்கான அப்டேட் M215FXXU2BUAC எனும் பில்டு நம்பர் கொண்டிருக்கிறது. கேலக்ஸி எப்41 மாடலுக்கான பில்டு நம்பர் F415FXXU1BUAC ஆகும். புதிய ஆண்ட்ராய்டு மட்டுமின்றி ஜனவரி 2021 ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்ச் இதில் இடம்பெற்று இருக்கிறது.



புதிய அப்டேட் இரு ஸ்மார்ட்போன்களில் பல்வேறு அம்சங்கள், மேம்படுத்தல்கள் மற்றும் பயன்பாட்டு அளவில் மாற்றங்களை வழங்குகிறது. இவற்றில் வடிவமைப்பு மாற்றம், மேம்பட்ட செயல்திறன், அதிகளவு கஸ்டமைசேஷன், பல்வேறு புதிய அம்சங்கள் என ஏராளமான மாற்றங்கள் இடம்பெற்று இருக்கிறது. 

இரு ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி மற்ற கேலக்ஸி எம் மற்றும் ஏ சீரிஸ் மாடல்களுக்கும் இந்த அப்டேட் விரைவில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News