செய்திகள்
தமிழக சிறைச்சாலைகளில் யோகா வகுப்பு

‘ஈஷா’ அறக்கட்டளை சார்பில் தமிழக சிறைச்சாலைகளில் யோகா வகுப்பு

Published On 2021-04-20 03:00 GMT   |   Update On 2021-04-20 03:00 GMT
‘ஈஷா’ அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் மூலம் பயிற்சி அளிக்கப்பட்ட யோகா ஆசிரியர்கள் மூலம் யோகா வகுப்பு நடைபெறுகிறது.
சென்னை:

‘ஈஷா’ அறக்கட்டளை சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய சிறைகள், பெண்களுக்கான சிறப்பு சிறைகள் மற்றும் மாவட்ட சிறைகளில் சிறப்பு யோகா வகுப்பு நேற்று தொடங்கியது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருச்சி, கோவை, சேலம், மதுரை, கடலூர், பாளையங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள மொத்தம் 18 சிறைச்சாலைகளில் இந்த யோகா வகுப்புகள் நடந்தது.

இந்த சிறப்பு யோகா வகுப்பு 28-ந் தேதி வரை 10 நாட்கள் ‘ஆன்-லைன்’ மூலம் நடைபெறுகிறது. ‘ஈஷா’ அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் மூலம் பயிற்சி அளிக்கப்பட்ட யோகா ஆசிரியர்கள் மூலம் யோகா வகுப்பு நடைபெறுகிறது.

கொரோனா பாதிப்பு மிகுந்த இச்சூழலில் சிறை கைதிகள் மற்றும் காவலர்களுக்கு உடல்-மன நலனை மேம்படுத்தும் நோக்கில் யோகா வகுப்புகள் நடைபெறுகின்றன. சிம்ம கிரியா, உப யோகா, நமஸ்கார் யோகா உள்ளிட்ட எளிமையான, சக்தி வாய்ந்த பயிற்சிகள் கற்றுத்தரப்படுகின்றன. இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியும், நுரையீரல் திறனும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

சிறை கைதிகளின் நலனுக்காக ஈஷா அறக்கட்டளை சார்பில் கடந்த 28 ஆண்டுகளாக யோகா வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட தகவல் ‘ஈஷா’ அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News