தொழில்நுட்பம்

பொது தேர்தல் 2019 - தேர்தல் ஆணையத்துடன் இணைந்து செயல்பட சமூக வலைதளங்கள் ஒப்புதல்

Published On 2019-03-21 11:49 GMT   |   Update On 2019-03-21 11:49 GMT
ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் சமூக வலைதள நிறுவனங்கள் மத்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை அமல்படுத்துவதாக தெரிவித்துள்ளன. #Socialmedia



சமூக வலைதளங்களான ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்றவை தேர்தல் நாளுக்கு முந்தைய 48 மணி நேர காலத்தில் தேர்தல் ஆணையம் வழங்கும் உத்தரவுகளை பூர்த்தி செய்வதாக தெரிவித்துள்ளன. 

அதன்படி தேர்தல் நடைபெறும் நாளுக்கு முந்தைய 48 மணி நேர காலத்தில் சமூக வலைதளங்களில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கக்கோரும் பதிவுகளை மூன்று மணி நேரத்தில் நீக்க சமூக வலைதளங்கள் ஒப்புக் கொண்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் ஆணையத்துடன் நடைபெற்ற சந்திப்பில் கையெழுத்தானது.



இந்தியாவில் பொது தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி துவங்கி மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் துவங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் அனைத்து விதமான தேர்தல் பரப்புரைகளுக்கும் தடை அமலாகியிருக்கும். 

தேர்தல் ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு கூட்டத்தில் வாட்ஸ்அப், கூகுள், ஷேர்சாட் மற்றும் டிக்டாக் போன்ற நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

சமூக வலைதளங்கள் அனைத்தும் சின்கா கமிட்டி பரிந்துரையின் படி சட்டத்திற்கு புறம்பானதாக மேற்கோள் காட்டப்படும் பதிவுகளை மூன்று மணி நேரத்திற்குள் நீக்குவதாக உறுதியளித்துள்ளன. சட்டப்பிரிவு 126 இன் படி தேர்தல் நாளுக்கு முந்தைய 48 மணி நேரத்திற்கு தேர்தல் பரப்புரை செய்வது குற்றமாகும்.
Tags:    

Similar News