செய்திகள்
விமான சேவை

இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் -மத்திய அரசு

Published On 2021-10-20 12:35 GMT   |   Update On 2021-10-20 12:35 GMT
ஒரு தவணை தடுப்பூசி போட்டவர்கள் அல்லது தடுப்பூசி போடாமல் வரும் பயணிகள், வருகைக்குப் பிந்தைய கொரோனா பரிசோதனை உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
புதுடெல்லி:

இந்தியாவிற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுளள்து.  அதன்படி, அக்டோபர் 25 முதல் உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் பெற்ற கொரோனா தடுப்பூசிகளை பரஸ்பரம் ஏற்றுக்கொண்ட நாட்டிலிருந்து, 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு வரும் பயணிகள், விமான நிலையத்தில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படுவார்கள. வீட்டு தனிமைப்படுத்தல் மற்றும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டியதில்லை. அதேசமயம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம்.

ஒரு தவணை தடுப்பூசி போட்டவர்கள் அல்லது தடுப்பூசி போடாமல் வரும் பயணிகள், வருகைக்குப் பிந்தைய கொரோனா பரிசோதனை உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதன் பிறகு அவர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள். ஏழு நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தல், 8வது நாளில் மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும். அப்போது கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டால், அடுத்த ஏழு நாட்களுக்கு அவர்களின் உடல்நலம் கண்காணிக்கப்படும்.
Tags:    

Similar News