ஆன்மிகம்
காரணீஸ்வரர் கோவில்

வசிஷ்ட முனிவர் வழிபட்ட காரணீஸ்வரர் கோவில்

Published On 2021-05-09 02:30 GMT   |   Update On 2021-05-08 05:03 GMT
உலக இயக்கங்கள் அனைத்துக்கும் காரணமானவர் ஈசன் ஒருவரே என்பதை சொல்லும் விதமாக இத்தல இறைவனுக்கு ‘காரணீஸ்வரர்’ என்று பெயர் வழங்கப்படுகிறது.
சென்னையின் மையப் பகுதியான மயிலாப்பூரில், கடற்கரைச் சாலையிலிருந்து வரும் காரணீஸ்வரர் கோவில் தெருவும், பஜார் சாலையும் சந்திக்கும் இடத்தில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.

சிஷ்ட முனிவர் வழிபட்ட சிறப்புக்குரிய தலம் இது. உலக இயக்கங்கள் அனைத்துக்கும் காரணமானவர் ஈசன் ஒருவரே என்பதை சொல்லும் விதமாக இத்தல இறைவனுக்கு ‘காரணீஸ்வரர்’ என்று பெயர் வழங்கப்படுகிறது. இத்தல இறைவியின் நாமம், சொர்ணாம்பிகை என்பதாகும். இந்த ஆலயம் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், பிற்கால சோழர்கள் இந்த ஆலயத்திற்கு பல்வேறு திருப்பணிகளைச் செய்திருப்பதும் கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது.

இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபட்டால், பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். மயிலாப்பூர் சப்த சிவாலயங்களில், முதலாவதாக வழிபட வேண்டிய தலம் இதுவாகும்.
Tags:    

Similar News