செய்திகள்
இ-பதிவு முறை

இ-பதிவு முறை: நிபந்தனைகளுடன் திருமண நிகழ்ச்சிகளுக்கான பதிவு மீண்டும் சேர்ப்பு

Published On 2021-05-19 13:07 GMT   |   Update On 2021-05-19 16:44 GMT
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல இ-பதிவு முறையை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. என்றாலும் மக்கள் வீதியில் சாதாரணமாக சுற்றுகின்றனர். இதனால் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல, மாவட்டத்திற்குள்ளேயே செல்ல இ-பதிவு முறையை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.

இது மக்கள் வெளியில் நடமாடுவதை தடுப்பதற்காகத்தான். பதிவு செய்து அதை காண்பித்தால் போலீசார் அனுமதிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

இதில் திருமணம் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு இ-பதிவு முறை முதலில் கொடுக்காமல் இருந்தது. அதன்பின் கொடுக்கப்பட்டது. ஒரு திருமணத்திற்கு பலர் பதிவு செய்வது தெரியவந்தது.

அதனடிப்படையில் திருமண இ-பதிவு முறைக்கு புதிய நடைமுறையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில்,

1. திருமணத்திற்கு செல்ல இ-புதிவு செய்ய திருமண அழைப்பிதழ் கட்டாயம். அதை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

2. திருமண அழைப்பிதழில் பெயர் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும்.

3. மணமகன், மணகள், பெற்றோர் ஆகியோரில் ஒருவர் பெயரில் மட்டுமே இ-பதிவு செய்ய வேண்டும்.

4. தவறான தகவல், பலமுறை பயன்படுத்தினாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

5. வாகனங்களின் பதிவு எண், ஆதார் எண், லைசென்ஸ், செல்போன் எண் கட்டாயம்

6. திருமணத்திற்கு வரும் அனைவருக்கும் சேர்த்து ஒரே இ-பதிவு

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News