ஆன்மிகம்
வீரபத்ரசுவாமி

தாராசுரம் வீரபத்ரசுவாமி கோவிலில் பாலாலயம்

Published On 2021-06-18 04:48 GMT   |   Update On 2021-06-18 04:48 GMT
தாராசுரம் வீரபத்ரசுவாமி கோவிலில் ராஜகோபுர திருப்பணி குழுவினர், பக்தர்கள் சார்பில் பாலாலயம் நடைபெற்றது. இதையொட்டி விக்னேஸ்வர பூஜையுடன் சிறப்பு ஹோமங்கள் நடந்தது.
கும்பகோணம் அருகே உள்ள தாராசுரத்தில் வீரபத்திர சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள ராஜகோபுரம் பல ஆண்டுகளாக திருப்பணி செய்யாமல் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது.

இதையடுத்து புதிய கட்டுமான பணிகள் கட்டுவதற்காக திருப்பணி வேலைகள் செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் ராஜகோபுர திருப்பணி குழுவினர், பக்தர்கள் சார்பில் பாலாலயம் நடைபெற்றது. இதையொட்டி விக்னேஸ்வர பூஜையுடன் சிறப்பு ஹோமங்கள் நடந்தது.
Tags:    

Similar News