செய்திகள்
வாகன சோதனை

கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3¼ லட்சம் பறிமுதல்

Published On 2021-04-05 07:09 GMT   |   Update On 2021-04-05 07:09 GMT
கோபிசெட்டிபாளையத்தில் இன்று அதிகாலை தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோபிசெட்டிபாளையம்:

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடக்கிறது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

மாவட்ட,மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகள் மற்றும் பதட்டமான இடங்களில் துணை ராணுவத்தினரும் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் இரவு நேரத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்கிறார்களா? என்றும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

கோபிசெட்டிபாளையம் தொகுதிக்கு உட்பட்ட சத்தி-ஈரோடு மெயின் ரோடு கோவை பிரிவு என்ற பகுதியில் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை நடத்தி கொண்டு இருந்தனர். இன்று அதிகாலை 3 மணியளவில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து வந்த ஒரு காரை சோதனை நடத்தினர்.

அப்போது காரில் ரூ. 2 லட்சத்து 27 ஆயிரத்து 500 பணம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்த அடில் என்பவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் ஜவுளி வாங்க ஈரோட்டுக்கு வந்ததாக தெரிவித்தார். ஆனால் பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல் சத்தியமங்கலம் தாலுகா செண்பகபுதுர் பகுதியை சேர்ந்த காள நாயக்கர் என்பவர் ஆடு வாங்க கொண்டு சென்ற ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்து 200 உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 3 லட்சத்து 36 ஆயிரத்து 700 ஐ தேர்தல் அதிகாரியும், கோபி ஆர்.டி.ஓ.வுமான பழனிதேவியிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News