செய்திகள்
கைது

நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுவிற்ற 62 பேர் கைது

Published On 2020-10-20 14:15 GMT   |   Update On 2020-10-20 14:15 GMT
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் சட்ட விரோதமாக மதுவிற்ற 62 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 336 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள், மதுவிலக்கு பிரிவு போலீசார் மாவட்டம் முழுவதும் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின்போது நாமக்கல் உட்கோட்டத்தில் சட்ட விரோதமாக மதுவிற்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 50 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் ராசிபுரம் உட்கோட்டத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டு, 40 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்செங்கோடு உட்கோட்டத்தில் 30 பேர் கைது செய்யப்பட்டு 146 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பரமத்திவேலூர் உட்கோட்டத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டு 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதவிர மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் 12 பேர் கைது செய்யப்பட்டு 40 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தமாக நேற்று ஒரே நாளில் நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 62 பேர் கைது செய்யப்பட்டு, 336 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுபோன்று அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
Tags:    

Similar News