தொழில்நுட்பம்
பிஎஸ் 5

நாங்க அப்படி சொல்லவே இல்லை - குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்த ப்ளிப்கார்ட்

Published On 2021-05-28 11:06 GMT   |   Update On 2021-05-28 11:06 GMT
ப்ளிப்கார்ட் தளத்தில் வாடிக்கையாளர்கள் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு அந்நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

சோனி பிஎஸ் 5 கன்சோலை வாங்கிய பல்வேறு வாடிக்கையாளர்கள், ப்ளிப்கார்ட் தளத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தனர். கேமிங் கன்சோல்களை வாங்க ஆர்டர் செய்தவர்களை தொடர்பு கொண்டு ஆர்டரை கேன்சல் செய்ய ப்ளிப்கார்ட் வலியுறுத்துவதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு ப்ளிப்கார்ட் சார்பில் பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, ஆர்டர் செய்த வாடிக்கையாளர்களுக்கு கன்சோல் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்படும் என்றே தெரிவிக்கப்பட்டது என ப்ளிப்கார்ட் தெரிவித்து உள்ளது. 



நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அமலில் இருப்பதே தாமதத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆர்டர்களை விரைவில் விநியோகம் செய்வதற்கான பணிகளை மேற்கொள்வதாக ப்ளிப்கார்ட் தெரிவித்து இருக்கிறது. மே 17 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெற்ற பிஎஸ்5 விற்பனையில் இந்த பிரச்சினை எழுந்ததாக கூறப்படுகிறது. 

`ப்ளிப்கார்ட் சார்பில் அழைப்புகள் வந்தது. அழைப்பை மேற்கொண்டவர், பிஎஸ்5 கன்சோலுக்கான ஆர்டரை கேன்சல் செய்தால் ரூ. 500 மதிப்புள்ள கூப்பன் வழங்குவதாக தெரிவித்தார்'. என பலர் தங்களின் சமூக வலைதள அக்கவுண்ட்களில் குற்றஞ்சாட்டினர். 

விநியோகம் செய்ய தாமதம் ஆகும், இதனால் ஆர்டரை கேன்சல் செய்யக் கோரி ப்ளிப்கார்ட் அனுப்பிய மின்னஞ்சல் ஸ்கிரீன்ஷாட்களும் வெளியாகி இருக்கின்றன.
Tags:    

Similar News