வழிபாடு
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில்

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் சிவராத்திரியையொட்டி நான்கு கால சாம பூஜை

Published On 2022-02-28 04:56 GMT   |   Update On 2022-02-28 04:56 GMT
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் சிவராத்திரியை யொட்டி நான்கு கால சாம பூஜை நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் சிவராத்திரி விழாவையொட்டி சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டு சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சிவராத்திரி விழாவையொட்டி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நான்கு கால சாம பூஜை நடக்கிறது.

இதையொட்டி அன்று இரவு 11 மணிக்கு முதல் கால பூஜை தொடங்குகிறது. அப்போது தாணுமாலய சாமிக்கு நெய், தேன், இளநீர், பஞ்சாமிர்தம் போன்றவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு சுவாமிக்கு தங்க அங்கி சார்த்தி முதல் கால பூஜை நடக்கிறது. இதுபோன்று நள்ளிரவு 12.30 மணிக்கு இரண்டாவது கால பூஜையும், மறுநாள் அதிகாலை 1.30 மணிக்கு மூன்றாவது கால பூஜையும், 2.30மணிக்கு நான்காம் கால பூஜையும் நடைபெறுகிறது.

அதனை தொடர்ந்து 4 மணிக்கு கோவிலை சுற்றி ஸ்ரீபலி விழாவும் நடக்கிறது. சிவராத்திரியன்று இரவு முழுவதும் கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும். 12 சிவாலயங்களிலும் சிவாலய ஓட்டத்தில் பங்கேற்று ஓடி வரும் பக்தர்கள் இறுதியாக சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலுக்கு தரிசனம் செய்ய வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் கண்காணிப்பாளர் சிவக்குமார், மேலாளர் ஆறுமுக தரன் மற்றும் தாணுமாலயன் தொண்டர் அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News