செய்திகள்
போராட்டம்

மதுரையில் ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2021-09-28 11:19 GMT   |   Update On 2021-09-28 11:19 GMT
மதுரை, திண்டுக்கல், தேனி, கம்பம், காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
மதுரை:

மதுரை மண்டல போக்குவரத்து ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

மதுரை மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் தேவராஜ் சிறப்புரையாற்றினார். முன்னாள் பென்சனர் டிரஸ்ட் உறுப்பினர் பிச்சை வாழ்த்திப் பேசினார். மாவட்ட பொருளாளர் சவுரிதாஸ் நன்றி கூறினார்.

இதில் மதுரை, திண்டுக்கல், தேனி, கம்பம்,காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

நிலுவையில் உள்ள 70 மாத டி.ஏ.வை உடனே வழங்க வேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும், மே மாதம் 2020-ல் இருந்து ஓய்வுபெற்ற மற்றும் காலமான தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும்.

பென்சன் அரியர்ஸ், பி.பி.ஓ.ஆர்டர், பி.ஆர்.பி. எப்.பணம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
Tags:    

Similar News