தொழில்நுட்பச் செய்திகள்
ஐகூ

அசத்தல் அம்சங்களுடன் உருவாகும் ஐகூ 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்

Published On 2021-12-01 10:52 GMT   |   Update On 2021-12-01 10:52 GMT
ஐகூ நிறுவனத்தின் புதிய 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


சிப்செட் குறைபாடு காரணமாக ஐகூ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவில்லை. இந்த மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படாது என்றே தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐகூ 9 சீரிஸ் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்கள் இடம்பெற்று இருக்கின்றன.

இந்தியாவில் ஐகூ 9 சீரிஸ் மாடல்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய ஐகூ 9 சீரிஸ் மாடல்களில் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. ஐகூ 9 சீரிசில்- ஐகூ 9 மற்றும் ஐகூ 9 ப்ரோ / லெஜண்ட் போன்ற மாடல்கள் இடம்பெறும் என தெரிகிறது.



முன்னதாக ஐகூ நிறுவனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் கொண்ட பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருந்தது. இந்த மாடல் ஐகூ 9 அல்லது ஐகூ 9 ப்ரோ மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. ஐகூ 9 மாடல்களில் அமோலெட் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், ஆண்ட்ராய்டு 12 மற்றும் புதிய ஐகூ யு.ஐ., 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம்.
Tags:    

Similar News