செய்திகள்
காங்கிரஸ்

மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி: காங்கிரஸ் கண்டனம்

Published On 2019-11-13 02:03 GMT   |   Update On 2019-11-13 02:03 GMT
ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை செய்ததன் மூலம் கவர்னர் அரசியல் அமைப்பை கேலி கூத்தாக்கி விட்டார் என்று காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது.
மும்பை :

மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறியிருப்பதாவது:-

மராட்டியத்தில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாத பட்சத்தில், தேர்தலுக்கு முன் கூட்டணி வைத்து போட்டியிட்ட பாரதீய ஜனதா, சிவசேனா கட்சிகளை சேர்த்தோ, 2-வது பெரிய கூட்டணியான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை சேர்த்தோ ஆட்சி அமைக்க அழைத்திருக்க வேண்டும்.

அப்படியே தனித்தனியாக கட்சிகளை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்து இருந்தாலும் காங்கிரஸ் கட்சியை ஏன் ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. இது அரசியல் உள்நோக்கம் கொண்டது. இது ஜனாதிபதி ஆட்சி அல்ல. தீங்கிழைக்கும் பாரதீய ஜனதாவின் அரசியல் ஆட்சி. ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை செய்ததன் மூலம் கவர்னர் அரசியல் அமைப்பை கேலி கூத்தாக்கி விட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News