செய்திகள்
தேசிய தேர்வு முகமை

நீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை: தேசிய தேர்வு முகமை

Published On 2020-10-20 14:34 GMT   |   Update On 2020-10-20 14:34 GMT
ஓஎம்ஆர் தாள்கள் அனைத்தும் போலியானவை. தேர்வில் குளறுபடிகள் இல்லை என்று தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு முடிவு கடந்த 16-ந்தேதி வெளியிடப்பட்டது. இதில் ஏராளமன குளறுபடிகள் இருந்ததாக கூறப்பட்டது.

பெரும்பாலான மாணவ - மாணவர்களின் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகள் எழுதிய பேப்பரே இல்லை. மற்றொருவர் பேப்பர் எனக் குற்றம்சாட்டினர். பலர் ஒரு மார்க் கூட எடுக்கவில்லை. அப்படி என்றால் எங்களது குழந்தைகள் தேர்வு மையத்திற்கு தூங்குவதற்காகவாக சென்றார்கள். எங்களுடைய பிள்ளைகள் எழுதிய விடைத்தாள் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையில் ஓஎம்ஆர் தாள்கள் வெளியிடப்பட்டு குளறுபடி நடைபெற்றதை சுட்டிக்காட்டினர். இந்நிலையில் தேசிய தேர்வு முகமை எந்த குளறுபடியும் நடக்கவில்லை. வெளியான ஓஎம்ஆர் தாள்கள் அனைத்தும் போலியானவை. அதை வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிசீலித்து வருகிறோம் எனத் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News