ஆட்டோமொபைல்

இந்தியாவில் முதல் முறையாக டெல்லியில்

Published On 2018-03-29 06:17 GMT   |   Update On 2018-03-29 06:17 GMT
இந்தியாவில் முதல் முறையாக டெல்லி நகரில் பாரத் ஸ்டேஜ் VI (பிஎஸ் VI) ரக எரிபொருள் பயன்படுத்தப்பட இருக்கிறது.
புதுடெல்லி:

இந்தியாவில் முதல் முறையாக டெல்லி நகரில் பாரத் ஸ்டேஜ் VI (பிஎஸ் VI) ரக எரிபொருள் பயன்படுத்த இருக்கிறது. அந்த வகையில் ஏப்ரல் 1, 2018 முதல் பிஎஸ் VI எரிபொருள் பயன்படுத்த திட்டமிடப்பட்டு இருந்தது. 

அந்த வகையில் டெல்லியில் தற்சமயம் 397 பெட்ரோல் மையங்களில் பிஎஸ் VI ரக எரிபொருள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இந்தியாவில் பிஎஸ் VI ரக எரிபொருள் பயன்படுத்தும் முதல் நகரம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. அதிக மக்கள் தொகை காரணமாக பிஎஸ் VI ரக எரிபொருள் பயன்படுத்த துவங்கியுள்ளது.

பழைய வணிக வாகனங்களால் டெல்லியில் காற்று மாசு கட்டுப்படுத்த முடியாதளவு அதிகரித்துள்ளது. காற்று மாசை குறைக்கும் நோக்கில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பிஎஸ் VI ரக எரிபொருள் பயன்படுத்த திட்டமிடப்பட்டது.

தற்போதைய சிஎன்ஜி ரக வாகனங்களை விட பிஎஸ் VI ரக எரிபொருள் காற்றின் மாசு அளவை வெகுவாக குறைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விற்பனை துவங்கி இருந்தாலும், பிஎஸ் VI ரக வாகனங்கள் அதிகரிக்காமல் இந்த திட்டம் முழுமை (வெற்றி) பெறாது என ஆட்டோமொபைல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் தற்சமயம் விற்பனையாகும் வாகனங்கள் பெரும்பாலும் பிஎஸ் VIII அல்லது பிஎஸ் IV ரக இன்ஜின்களை கொண்டிருக்கின்றன. இந்தியாவில் பிஎஸ் VI ரக வாகனங்களை தயாரிக்கும் ஒற்றை நிறுவனமாக மெர்சிடிஸ் பென்ஸ் இருக்கிறது. மற்ற நிறுவனங்கள் இதற்கான அனுமதியை பெற முயற்சித்து வருகின்றன.

இந்தியாவில் பிஎஸ் VI ரக எரிபொருள் விலையை நிர்ணயிப்பதில் குழப்பம் நிலவி வருகிறது. பெட்ரோல் மையங்கள் எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து இதற்கான அனுமதியை பெற இருப்பதாக தெரிவித்துள்ளன. 
Tags:    

Similar News