இந்தியா
நிதின் கட்காரி

சுங்க கட்டண வருவாய் ஆண்டுக்கு ரூ.1.40 லட்சம் கோடியாக உயரும்: நிதின் கட்காரி

Published On 2021-12-22 02:51 GMT   |   Update On 2021-12-22 02:51 GMT
இன்னும் 3 ஆண்டுகளில் சுங்க கட்டண வருவாய் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடியாக உயரும் என்று மத்திய தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.
புதுடெல்லி :

மத்திய தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்காரி நேற்று டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு தற்போது சுங்க கட்டணம் மூலம் ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்து வருகிறது. இன்னும் 3 ஆண்டுகளில் இந்த வருவாய் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடியாக உயரும். நாட்டில் போக்குவரத்து அடர்த்தி ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதனால், உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீட்டாளர்களுக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. சாலை கட்டுமான திட்டங்களில் குழுக்கள் விரைந்து முடிவு எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், செலவு அதிகரித்து விடும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News