செய்திகள்
உத்தவ் தாக்கரே

சூழ்நிலை மோசமானால் லாக்டவுன்: மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை

Published On 2021-02-21 15:55 GMT   |   Update On 2021-02-21 15:55 GMT
லாக்டவுனை விரும்புவோர் மாஸ்க் இல்லாமல் வெளியில் சுற்றலாம் என மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உறுதி செய்துள்ளார்.
இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இருந்தாலும் தீவிர கட்டுப்பாட்டால் வைரஸ் தொற்றை சிறப்பாக கட்டுப்படுத்தியது.

ஆனால், தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிதாக 7 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த மகாராஷ்டிரா மாநில அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறுகையில் ‘‘கொரோனா வைரஸ் தொற்று மோசமானால், அதன்பின் லாக்டவுனை நாங்கள் அமல்படுத்த வேண்டும். லாக்டவுனை விரும்புவோர், மாஸ்க் இல்லாமல் சுற்றலாம். லாக்டவுன் வேண்டாம் என்றால், கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்’’ என்றார்.
Tags:    

Similar News