செய்திகள்
ஜனநாயக் ஜனதா கட்சி சின்னம்

ஜனநாயக் ஜனதா கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் வழங்கியது தேர்தல் ஆணையம்

Published On 2019-11-29 16:48 GMT   |   Update On 2019-11-29 16:48 GMT
அரியானா மாநில தேர்தலில் போட்டியிட்டு 10 தொகுதிகளை கைப்பற்றிய ஜனநாயக் ஜனதா கட்சிக்கு மாநில கட்சி அந்தஸ்து வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சண்டிகர்: 

அரியானாவில் செயல்பட்டு வந்த இந்திய தேசிய லோக் தளம் கட்சியில், சவுதாலா குடும்பத்திற்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 2018-ம் ஆண்டு அக்கட்சி உடைந்தது. 

அஜய் சிங் சவுதாலாவும், துஷ்யந்த் சவுதாலாவும் இணைந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜனநாயக் ஜனதா கட்சியை தொடங்கினர். இந்த கட்சிக்கு தேர்தல் ஆணையம் சார்பில் அங்கீகாரம் வழங்கப்படாமல் இருந்தது. 

இதற்கிடையில், அரியானாவில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சாவி சின்னம் சார்பில் போட்டியிட்ட ஜனநாயக் ஜனதா கட்சி 10 இடங்களை கைப்பற்றியது. 

இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஜனநாயக் ஜனதா கட்சிக்கு இன்று மாநில கட்சி என்ற அந்தஸ்தை வழங்கியுள்ளது. இக்கட்சியின் சின்னமாக சாவி சின்னமும் வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News