ஆன்மிகம்
திக்குறிச்சியில் 30 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் கோவில்

திக்குறிச்சியில் 30 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் கோவில் சீரமைக்கப்படுமா?: பக்தர்கள் எதிர்பார்ப்பு

Published On 2021-09-14 03:28 GMT   |   Update On 2021-09-14 03:28 GMT
மார்த்தாண்டம் கொட்டாரத்து விளை பள்ளியறை பகவதியம்மன் கோவில் கடந்த 30 ஆண்டுகளாக பூஜைகள் இன்றி மேற்கூரை ஓடுகள் உடைந்து பழுதடைந்து பூட்டியே கிடக்கிறது. x
மார்த்தாண்டம் அருகே உள்ள திக்குறிச்சி பகுதியில் கொட்டாரத்து விளை பள்ளியறை பகவதியம்மன் கோவில் உள்ளது. இந்த பகுதியில் மன்னர்கள் காலத்தில் சிறிய அரண்மனை இருந்துள்ளது. திக்குறிச்சி மகாதேவரை மன்னர்கள் தரிசனம் செய்ய வரும்போது இந்த அரண்மனையில் ஓய்வெடுத்து சென்றுள்ளனர். அரண்மனை அருகே இருந்த காரணத்தால் இந்த கோவில் கொட்டாரத்துவிளை பகவதி என்று அழைக்கப்பட்டு வந்தது.

இந்த கோவில் கடந்த 30 ஆண்டுகளாக பூஜைகள் இன்றி மேற்கூரை ஓடுகள் உடைந்து பழுதடைந்து பூட்டியே கிடக்கிறது. 490 தேவசம் போர்டு கோவில் கட்டுபாட்டில் 305 -வது கோவிலாக இந்த கோவில் உள்ளது. பயணம் மகாதேவர் கோவில் கீழ் உள்ள இந்த கோவில் அரண்மனையை போல காணாமல் செல்லும் முன் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் பழுதை சீரமைத்து தினசரி பூஜைகளுக்காக அர்ச்சகரை நியமித்து பூஜைகள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News