செய்திகள்
தமிழக அரசு தலைமைச் செயலகம்

தென்பெண்ணையாற்றில் அணை- கர்நாடகாவுக்கு எதிரான தமிழக அரசின் மனு தள்ளுபடி

Published On 2019-11-14 06:42 GMT   |   Update On 2019-11-14 06:42 GMT
தென்பெண்ணையாற்று படுகையில் கர்காடகா அரசு அணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
புதுடெல்லி:

கர்நாடகா மாநிலம் சென்னகேசவா மலையில் தென்பெண்ணை ஆறு உற்பத்தியாகிறது. அங்கிருந்து ஓசூர் வழியாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டம் வழியாக 432 கி.மீ தூரம் பயணித்து கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. 

இங்கு தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் எல்லையை ஒட்டி தென்பெண்ணையாற்று படுகையில் கர்நாடக அரசு புதிய அணை கட்ட திட்டமிட்டு, அதற்கான ஆய்வு பணிகளை தொடங்கியது. இதையடுத்து,  கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தென்பெண்ணை ஆற்றில் தங்களின் ஒப்புதல் இல்லாமல் கட்டுமானப் பணிகள், ஆய்வுகள் உள்ளிட்ட எவ்வித பணிகளும் மேற்கொள்ளக் கூடாது. தமிழகத்திலும் தென்பெண்ணையாறு ஓடுவதால் கர்நாடக அரசு முழு உரிமை கோர முடியாது என்று தமிழக அரசின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.



இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்த நிலையில், மேற்கூறிய வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட தடையில்லை எனக்கூறி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. 
Tags:    

Similar News