ஆன்மிகம்
சிவன் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு

மகா சிவராத்திரி: சிவன் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு

Published On 2021-03-11 02:56 GMT   |   Update On 2021-03-11 02:56 GMT
மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே தமிழகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
இந்துக்களின் முக்கிய விழாவான மகா சிவராத்திரி விழா இன்று (11-ந்தேதி) இரவு கொண்டாடப்படுகிறது. தமிழகம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள கோவிலில் இன்று இரவு முதல் நாளை அதிகாலை வரை பக்தர்கள் வழிபாட்டிற்கு கோவில் திறக்கப்பட்டு வழக்கம்போல் அபிஷேக, ஆராதனைகளுடன் விழா நடைபெற உள்ளது.

சிவபெருமான் அடி முடி காண முடியாத ஜோதிப்பிழம்பாக காட்சியளித்த தினமே மகா சிவராத்திரி திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. மகா சிவராத்திரி உருவானதாகக் கூறப்படும் திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

சிவராத்திரியான இன்று அதிகாலை முதலே தமிழகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடும், அபிஷேகங்களும் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் நீண்ட வரியில் நின்று சிவபெருமானை வழிபாடு செய்து வருகின்றனர்.

சிவராத்திரியை முன்னிட்டு இன்று அதிகாலையில் 12 சிவாலயங்களை, ஓடிச்சென்று வழிபடும் சிவாலய ஓட்டம் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கமான பக்தர்கள் கலந்து கொண்டு ஓடி வருகின்றனர்.

Tags:    

Similar News