லைஃப்ஸ்டைல்
வத்தல் குழம்பு மசாலா பொடி

வீட்டிலேயே செய்யலாம் மணக்கும் வத்தல் குழம்பு மசாலா பொடி

Published On 2021-05-27 09:31 GMT   |   Update On 2021-05-27 09:31 GMT
வத்தக்குழம்பு செய்யும் போது கடையில் வாங்கும் பொடியை போட்டு செய்யலாமல் இந்த பொடியை போட்டு செய்தால் வீடே மணக்கும். இந்த இந்த பொடியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

நல்லெண்ணை - 2 டீஸ்பூன்
கடலை பருப்பு - 2 டீஸ்பூன்
தோலுரித்த முழு உளுந்து - 2 டீஸ்பூன்
மிளகு - ½ டீஸ்பூன்
வெந்தயம் - ½ டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
தனியா - 6 டீஸ்பூன்
கார சிகப்பு மிளகாய் - 20
அரிசி - 2 டீஸ்பூன்
பெருங்காயம் - ½ தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கப்

செய்முறை

கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணை ஊற்றி சூடானதும் கடலை பருப்பு, உளுந்து, மிளகு, வெந்தயம், சீரகம், தனியா என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வாசனை வரும் வரை கிளற தனியா நிறம் மாறி நல்ல வாசனை வரும்.

அடுத்து மிளகாய், அரிசி, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்துகிளற வேண்டும். மிளகாய் காந்த கூடாது. வீடு முழுதும் வாசனை தூக்கும்.

அனைத்தையும் வறுத்த பின்னர் ஆறவைத்து சூடு ஆறியதும் மிக்சியில் போட்டுபொடித்து கொள்ளவும்.

அரைத்த பொடியை காற்று புகாத (air tight container) ஜாரில் வாரகணக்கில் சேமித்து வைக்கலாம்.

வத்தல் குழம்பு செய்யும் பொழுது, 6 கப் குழம்பிற்கு 2 மேஜை கரண்டி பொடி சேர்க்க வேண்டும். முடியும் தருவாயில் பொடி சேர்த்து 2 கொதி வந்ததும் அடுப்பை அணைக்க வேண்டும்.
Tags:    

Similar News