ஆன்மிகம்
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

Published On 2021-04-19 04:14 GMT   |   Update On 2021-04-19 04:14 GMT
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் புகழ்மிக்க சனீஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனிக்கிழமை தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். குறிப்பாக சனிப் பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

இந்தநிலையில் கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் சாமி தரிசனம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்களின் கூட்டம் வாரம்தோறும் குறைந்து வந்தது.

இந்நிலையில் சனிக்கிழமை மற்றும் தொடர் விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.

கொரோனா விதிமுறைகள்படி பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. பக்தர்கள் முகக்கவசம், சமூக இடைவெளியை கடை பிடித்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News