செய்திகள்
வாக்காளர்கள்

பீகார் முதற்கட்ட தேர்தல்: மாலை 3 மணி நிலவரப்படி 46.29 சதவீகித வாக்குப்பதிவு

Published On 2020-10-28 11:29 GMT   |   Update On 2020-10-28 11:29 GMT
பீகார் முதற்கட்ட தேர்தலில் இன்று மாலை 3 மணி நிலவரப்படி 46.29% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாட்னா:

பீகார் சட்டசபை தேர்தலுக்கான 3 கட்ட வாக்கு பதிவில் முதற்கட்ட வாக்கு பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்தலில் 114 பெண்கள் உள்பட 1,066 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 71 தொகுதிகளுக்கு நடைபெறும் முதற்கட்ட வாக்கு பதிவில் முதல் மந்திரி நிதிஷ் குமாரின் அமைச்சரவையில் உள்ள 6 மந்திரிகளின் அரசியல் எதிர்காலம் நிர்ணயம் செய்யப்படும்.

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான பல்வேறு விதிமுறைகளும் வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளன.  7 லட்சம் சேனிடைசர்கள், 46 லட்சம் மாஸ்குகள், 6 லட்சம் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், 6.7 லட்சம் முக கவசங்கள், 23 லட்சம் ஜோடி கையுறைகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. இந்த தேர்தலில் 2 கோடி பொதுமக்கள் வாக்களிக்கின்றனர். வாக்குச்சாவடியில் முறைகேடுகள், அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்கு பாதுகாப்பு பணிக்காக 30,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

இதனிடையே பீகார் மாநில முதற்கட்ட தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 6.74% வாக்குகளும், காலை 11 மணி நிலவரப்படி, 18.31 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

இந்நிலையில் பீகார் முதற்கட்ட தேர்தலில், இன்று மாலை 3 மணி நிலவரப்படி 46.29% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
Tags:    

Similar News