உள்ளூர் செய்திகள்
சித்ரா பவுர்ணமியையொட்டி ஆன்மீக நடைபயணம் மேற்கொண்ட பக்தர்கள்.

புதுச்சேரியில் ஆன்மிக நடைபயணம்

Published On 2022-04-17 05:41 GMT   |   Update On 2022-04-17 05:41 GMT
புதுவை வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் ஆன்மிக நடைபயணம் நடைபெற்றது.
புதுச்சேரி:

வில்லியனூரில் பழமைவாய்ந்த திருக்காமீஸ்வரர் கோவில் உள்ளது.

அதனை சுற்றிலும் பிரசித்திபெற்ற 6 சிவாலயங்களும், 18 சித்தர் ஜீவ சமாதியும் உள்ளது. திருவண்ணாமலை கிரிவலம் போல வில்லியனூர் திருகாமீஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி நாளில் ஆன்மிக நடைபயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 

நடை பயணத்தில் பங்கேற்ற பக்தர்கள் நான்கு  மாட வீதிகளில் உள்ள அம்மன், விநாயகர், தென்கலை வரதராஜபெருமாள் கோவில்களில் வழிபட்டு, அனந்தம்மாள் மடம் ஆஞ்சநேயர், ஏகாம்பர ஈஸ்வரன் கோவில், மூலக்கடை பாடல் பெற்ற வினாயகர் கோவில், ராமபரதேசி சித்தர் பீடம் உட்பட பல்வேறு கோவில்களின் தரிசனத்துடன் நடைபயணத்தை மீண்டும் திருக்காமீஸ்வரர் கோவிலில் நிறைவு செய்தனர். 

சித்ரா பவுர்ணமியன்று திருவண்ணாமலை கிரிவலத்திற்கு செல்ல முடியாத  புதுவை, தமிழக பகுதியை சேர்ந்த பக்தர்களும், வில்லியனூரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த சிவனடியார்கள், சிவ பக்தர்கள் அதிக அளவில் இந்த  நடைபயணத்தில் பங்கேற்றனர்.
Tags:    

Similar News