பெண்கள் மருத்துவம்
தாய்ப்பால்

ஒரு நாளைக்கு எத்தனை முறை எவ்வளவு நேரம் தாய்ப்பால் கொடுக்கலாம்?

Published On 2021-12-03 08:28 GMT   |   Update On 2021-12-03 08:28 GMT
குழந்தையின் முதல் 6 மாதங்களில் அதன் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் தாய்ப்பாலில் உள்ளன. குழந்தைக்கு தண்ணீர், டீ, மற்ற பால் உணவுகள், வேறு வகையான உணவுகள் போன்ற எதுவும் தர கூடாது.
சீம்பால் என்பது குழந்தை பிறந்த முதல் 2, 3 நாட்கள் வரை தாயிடம் ஊறும் கெட்டியான மஞ்சள் நிற பால். தாயிடமிருந்து வரும் சீம்பாலில் விட்டமின் ஏவும், நோய் எதிர்ப்பு சக்தியும், குழந்தை வளர்ச்சிக்கான சத்து பொருட்களும் உள்ளன. சீம்பாலைக் குழந்தைக்கு கொடுப்பதால் வயிற்றுப்போக்கு, நோய் தொற்றுகள் உள்ளிட்ட பல நோய்களிடமிருந்து குழந்தைகளைக் காக்கும். மேலும், குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை சீம்பால் அதிகரிக்கும்.

ஒரு நாளைக்கு ஒரு குழந்தைக்கு 2-3 மணி நேரத்துக்குள் ஒருமுறை பால் ஊட்ட வேண்டும். அதாவது 8-12 தடவை குழந்தைக்கு பால் ஊட்ட வேண்டும். மாலையிலும் இரவிலும் பால் ஊறுவது அதிகம் என்பதால் ராத்திரி நேரத்திலும் குழந்தைகளுக்கு பால் ஊட்ட வேண்டும்.

ஒரு மார்பகத்தில் குழந்தை எவ்வளவு நேரம் குடிக்கிறதோ அதைப் பொறுத்து சுமார் 15-20 நிமிடங்கள் வரை கொடுக்கலாம். அதன் பிறகு குழந்தைக்கு தேவை என்றால் அடுத்த மார்பகத்திலும் பால் குடிக்க வைக்கலாம்.

ஒரு குழந்தை 6-8 முறை சிறுநீர் கழித்தாலோ, 2-3 முறை மலம் கழித்தாலோ குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்கிறது என அர்த்தம். குழந்தையின் மலத்தின் நிறம் கருப்பிலிருந்து மஞ்சளுக்கு மாறுகிறது என்றால் குழந்தைக்கு போதுமான அளவு பால் கிடைக்கிறது எனப் புரிந்து கொள்ளலாம். இரண்டு வாரங்களுக்கு பிறகு ஒவ்வொரு வாரமும் 150-200 கிராம் வரை குழந்தையின் எடை அதிகரித்தாலே பால் போதுமாக இருக்கிறது என அறிந்து கொள்ளலாம்.

குழந்தையின் முதல் 6 மாதங்களில் அதன் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் தாய்ப்பாலில் உள்ளன. குழந்தைக்கு தண்ணீர், டீ, மற்ற பால் உணவுகள், வேறு வகையான உணவுகள் போன்ற எதுவும் தர கூடாது.

மற்ற உணவுகளைப் போலவே தண்ணீரும் குழந்தைக்கு 6 மாதங்கள் நிரம்பிய பிறகே தர வேண்டும். அதற்கு முன்னால் குழந்தைக்கு தாய்ப்பால் தவிர வேறு எந்த உணவு தந்தாலும் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கலாம். நோய் தொற்றுக்கு குழந்தை ஆளாகலாம்.
Tags:    

Similar News