தொழில்நுட்பம்
வி

விலை உயர்வுக்கு திட்டமிடும் வி நிறுவனம்

Published On 2020-11-17 06:50 GMT   |   Update On 2020-11-17 06:50 GMT
வி நிறுவனம் தனது சலுகை கட்டணத்தை விரைவில் உயர்த்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் தனது சலுகை கட்டணங்களை 15 முதல் 20 சதவீதம் வரை உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. புதிய விலை உயர்வு இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.

வியாபாரத்தில் தொடர் இழப்பை சரி செய்யும் முயற்சியாக விலை உயர்வை அமல்படுத்த வி நிறுவனம் திட்டமிட்டு இருக்கலாம் என தெரிகிறது. பாரதி ஏர்டெல் நிறுவனமும் இதேபோன்று சலுகை விலையை உயர்த்தலாம் என தகவல் வெளியாகி உள்ளது. 



எனினும், இரு நிறுவனங்களும் ஜியோ சலுகை கட்டணங்களுக்கு போட்டியை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சிக்கலாம் என கூறப்படுகிறது. மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அடிப்படை கட்டணத்தை நிர்ணயிக்கும் முன் வி நிறுவனம் விலை உயர்வு பற்றி முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த விலை உயர்வு டிசம்பர் மாத வாக்கில் அமலுக்கு வரலாம் என்றும் கூறப்படுகிறது. விலை உயர்வு அதிகபட்சம் 25 சதவீதம் வரை இருக்கலாம் என அந்நிறுவன வட்டாரங்கள் கூறினாலும், இவ்வாறு அமல்படுத்துவது சற்றே சிக்கலான காரியம் என்றும் கூறப்படுகிறது. 
Tags:    

Similar News