இந்தியா
பிரதமர் மோடி

பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்களாக இந்தியர்கள் இருப்பதில் நாடே பெருமை கொள்கிறது- பிரதமர் மோடி

Published On 2022-01-25 04:15 GMT   |   Update On 2022-01-25 05:03 GMT
சிறுவர், சிறுமியர் தங்களை சுற்றியுள்ள மக்களிடம் உள்ளூர் தயாரிப்புகளை பயன்படுத்துவதற்கு ஊக்கமளிக்க வேண்டும் என கூறினார்.
புது டெல்லி:

இந்தியாவில் சமூக சேவை, கல்வியியல், விளையாட்டு, கலை, கலாசாரம் ஆகியவற்றில் புதுமைகள் படைத்த 5 முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும், வீர தீர செயல் புரியும் குழந்தைகளுக்கும் ஆண்டுதோறும் ‘பிரதம மந்திரி பால சக்தி புரஸ்கார்’ விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான விருது பெற்ற 29 பேருடன், பிரதமர் மோடி காணொளியில் கலந்துரையாடினார். அப்போது பேசிய மோடி கூறியதாவது:-

நாட்டுக்கு உழைப்பதே முதன்மையானது என்று கருதிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இலக்கை நோக்கி இளைஞர்கள் செயலாற்ற வேண்டும்.

இன்று உலகம் முழுவதும் உள்ள பல பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்களாக இந்தியர்கள் இருப்பதில் நாடே பெருமை கொள்கிறது. 

இந்தியாவில் உள்ள சிறுவர், சிறுமியர் தங்களை சுற்றியுள்ள மக்களிடம் உள்ளூர் தயாரிப்புகளை பயன்படுத்துவதற்கு ஊக்கமளிக்க வேண்டும். 

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
Tags:    

Similar News