ஆன்மிகம்
தீமை அகல இறைவனை வழிபடுங்கள்

தீமை அகல இறைவனை வழிபடுங்கள்

Published On 2019-10-25 04:57 GMT   |   Update On 2019-10-25 04:57 GMT
பஞ்சபூதங்களால் ஆன நமது உடலில் இறைவனை குடியமர்த்திக் கொண்டால், அவர் நம் உள்ளத்தில் இருந்து அரசாட்சி புரியும், அறியாமை என்னும் இருள் அரக்கனை ஞான ஒளியேற்றி அங்கிருந்து அகற்றுவார்.
நரகாசுரனை அழிப்பதற்காகச் சென்ற கண்ணபிரான், அதற்கு முன்பாக அவன் தனக்கு பாதுகாப்பு அரணாக அமைத்திருந்த நான்கு கோட்டைகளை உடைத்தெறிந்தார். நரகாசுரன் அமைந்து வைத்திருந்த ‘கிரி துர்க்கம்’, ‘அக்னி துர்க்கம்’, ‘ஜல துர்க்கம்’, ‘வாயு துர்க்கம்’ ஆகிய நான்கு கோட்டைகளையும் தாண்டிதான் கண்ணன் நரகாசுரனை அழிக்க அவன் இருப்பிடத்திற்குள் நுழைந்தார். இதில் ஆழ்ந்த உள் அர்த்தம் பொதிந்திருக்கிறது.

அதாவது பஞ்ச பூதங்களால் ஆன நமது உடலின் உள்ளே புகுந்து ஆட்சி செய்யும் தீமைகளை அகற்றுவதற்கு, இறைவனை வழிபாடு என்றும் பக்தி மார்க்கம் வழியாக நம் உள்ளத்திற்குள் நாம் அனுமதிக்க வேண்டும். அப்படி நாம் அவரை அனுமதிக்கும்போது, பஞ்ச பூதங்களால் ஆன நமது உடல் என்னும் கோட்டைகளை தகர்த்து இறைவன் நம் உள்ளத்தின் அருகாமையில் வருவார். கிரி துர்க்கம்- மண், அக்னி துர்க்கம்- நெருப்பு, ஜல துர்க்கம்- நீர், வாயு துர்க்கம் - காற்று. இந்த நான்கு பூதங்களும் இருக்கும் இடத்தில் ஆகாயமான ஐந்தாவது பூதம் இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இப்படி பஞ்சபூதங்களால் ஆன நமது உடலில் இறைவனை குடியமர்த்திக் கொண்டால், அவர் நம் உள்ளத்தில் இருந்து அரசாட்சி புரியும், அறியாமை என்னும் இருள் அரக்கனை ஞான ஒளியேற்றி அங்கிருந்து அகற்றுவார். அவ்வாறு ஒளிபெற்ற ஒருவனது வாழ்வில், ஆண்டின் ஒரு தினம் அல்ல, ஆண்டின் ஒவ்வொரு தினமும் தீபாவளியாகவே அமையும்.
Tags:    

Similar News