தொழில்நுட்பம்
பிக்சல் 4ஏ

கூகுள் பிக்சல் 4ஏ வெளியீட்டு விவரம்

Published On 2020-07-29 04:40 GMT   |   Update On 2020-07-29 04:40 GMT
கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

கூகுள் நிறுவனம் தனது புதிய பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனினை ஆகஸ்ட் 3 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு பலமுறை ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.

முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியீடு ஜூன் 3 ஆம் தேதி நடைபெறும் என  கூறப்பட்டது. பின் இதைத் தொடர்ந்து பலமுறை இதன் வெளியீட்டு தேதி சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகின. அந்த வரிசையில், புதிய பிக்சல் ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 3 இல் அறிமுகமாகும் என கூறப்பட்டு இருக்கிறது. 



கூகுள் பிக்சல் 4ஏ எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

- 5.81 இன்ச் 1080x2340 பிக்சல் FHD+ OLED 18.5:9 டிஸ்ப்ளே, 443 PPI, HDR
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர்
- அட்ரினோ 618 GPU
- டைட்டன் M செக்யூரிட்டி சிப்
- 6 ஜிபி LPDDR4X ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 10
- 12.2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், டூயல் PD ஆட்டோபோக்கஸ், OIS, EIS
- 8 எம்பி செல்ஃபி கேமரா, 84° அல்ட்ரா வைடு லென்ஸ்
- டூயல் சிம் ஸ்லாட்
- கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், 2 மைக்ரோபோன்கள்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப்-சி
- 3080 எம்ஏஹெச் பேட்டரி
- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
Tags:    

Similar News