சிறப்புக் கட்டுரைகள்
என்னை கவர்ந்த பெரியார்

குஷ்பு என்னும் நான்: சந்தித்ததும் சிந்தித்ததும் - என்னை கவர்ந்த பெரியார்

Published On 2021-12-06 14:09 GMT   |   Update On 2021-12-06 14:09 GMT
நடிகை குஷ்பு கடந்த வந்த பாதையும் பயணமும் கடினமானது அதை ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
தமிழ்திரை உலகில் கிட்டத்தட்ட எல்லா முன்னணி நடிகர் களுடனும் இணைந்து பல படங்களில் நடித்து இருக்கிறேன்.
ரஜினி, கமல், சத்யராஜ், பிரபு, சரத்குமார், கார்த்திக், விஜயகாந்த்,  என்று எல்லா நடிகர்களுடனும் நடித்து இருக்கிறேன். ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு விதமான குணாதிசயங்கள் உண்டு. அதே நேரம் இந்தி திரை உலகில் எப்படி குழந்தை நட்சத்திரமாக இருந்து பல ஜாம்பவான்களின் அன்பை பெற்றேனோ அதேபோல் தமிழ் திரை உலகில் எல்லோருடைய நட்பையும் சம்பாதிக்க முடிந்தது. அந்த வகையில் நான் கொடுத்து வைத்தவள் என்றே சொல்ல வேண்டும்.

சத்யராஜ் சாருடன்தான் அதிக படங்கள், அதாவது 13 படங்கள் நடித்துள்ளேன். நடிகனில் தொடங்கி சுயம்வரம், வெற்றிவேல் சக்திவேல், ரிக்ஷா மாமா, மலபார்  போலீஸ், என்னம்மா கண்ணு, கல்யாண கலாட்டா, வீரநடை, பிரம்மா, உன்னை கண்தேடுதே, புரட்சிக்காரன், பெரியார் என்று அது ஒரு நீண்ட வரிசை.

பெரும்பாலும் எல்லா படங்களும் ரசிகர்களின் பாராட்டை பெற்றது. அதில் பெரியார் படம் மாறுபட்டது. தமிழகத்தில் மிகப்பெரிய சீர்திருத்தவாதி. குறிப்பாக பெண் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு பாடுபட்டவர். அடித்தட்டு மக்கள் முன்னேற் றத்துக்காக தொடர்ந்து பாடுபட்டவர். அப்படிப்பட்ட ஒரு மாபெரும் தலைவரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை நினைத்து பெருமைப்படுகிறேன்.

ஆனால் நான் மணியம்மை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. அந்த நேரத்தில் மணியம்மை அவர்களின் உறவினர் ஒருவர் வெளிப்படையாகவே, “நான் குஷ்புவை பல படங்களில் பார்த்திருக்கிறேன். எங்கள் அத்தையும் (மணியம்மை) அவரைப்போலவே இருப்பார். எனவே அத்தை மணியம்மை வேடத்துக்கு நூறு சதவீதம் குஷ்பு பொருத்தமானவராக இருப்பார்” என்றார்.

அதன்பிறகு தான்  பிரச்சினைகள் ஓய்ந்து படமும் வெளி வந்தது. மிகப்பெரிய பாராட்டும் கிடைத்தது. பெரியார் படத்தில் நடித்த போது சிலர் என்னிடம் கேட்டதுண்டு. நீ நெற்றியில் குங்குமம் அணிந்து சாமி கும்பிடு வதில் தீவிரமாக இருப்பாய். உனக்கு இது சரிப்பட்டு வருமா? என்றார்கள்.

ரொம்ப சிம்பிள். கண்மூடித் தனமாக எல்லாவற்றையும் எதிர்ப் பது அல்லது ஆதரிப்பதுதான் தவறு. பெரியார் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களை வெறுக்கவில்லை. கடவுளின் பெயரை சொல்லி தவறு நடப்பதைத்தான் எதிர்த்து இருக்கிறார். பெண்ணடிமைத் தனத்தை எதிர்த்து இருக்கிறார். மிகவும் கீழ்நிலையில் இருந்த மக்களுக்கு சம உரிமை வேண்டும் என்பதில்தான் தீவிரமாக இருந்துள்ளார். வளர்ந்து வரும் சமூகத்தில் இந்த மாதிரியான குறைகள்  களையப்பட வேண்டும். பெரி யாரின் இந்த கொள் கைகள் எனக்கு பிடிக்கும்.

அந்த படத்தில் சத்யராஜ் சார் பெரியார் போலவே பிரமாதமாக நடித்து இருந்தார். பெரியாரை நான் பார்த்ததில்லை. ஆனால் சத்ரபதி சிவாஜி, வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார் போன்ற தலைவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை சிவாஜி சார், தன் நடிப்பால் இப்படித்தான் இருப்பார்கள் என்று நினைக்க வைத்தார். அதேபோல்தான் பெரியார் இப்படித்தான் இருப்பார் என்று கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருப்பார் சத்யராஜ்.
பொதுவாகவே சத்யராஜ் சாருக்கு படப்பிடிப்பு தளத்தில் ஒரு மரியாதை இருக்கும். அவர் வந்தாலே ஷூட்டிங் ஸ்பாட் களை கட்டும். அந்த அளவுக்கு ஜாலியாக இருப்பார்.

எனக்கு கிடைத்த நண்பர்களில் அவரும் முக்கியமானவர். அதேநேரம் எல்லோரிடமும் ஒரு இடைவெளியை கடைபிடிக்க தவற மாட்டார். இது அவர் மீது ஒரு பயம் கலந்த மரியாதையை ஏற்படுத்தியது.

அப்போது நிஜ வாழ்க்கையில் அப்பாக்களாக இருந்த சத்யராஜ் சார், வாசு சார், பிரபு சார் இவர்களெல்லாம் என்னுடன் ஜோடியாக நடித்த வர்கள். அவர்களது பிள்ளைகள் என்னுடன் விளையாடும் ஜோடிகள்.
படப்பிடிப்பு தளத்துக்கு வரும் சத்யராஜ் சார் மகன் சிபி, வாசு சார் மகன் பிரசாந்த், பிரபு சார் மகன் விக்ரம் பிரபு, மகள் ஐஸ்வர்யா எல்லோரும் குட்டீஸ்கள்.

ஓய்வாக இருந்தால் போதும் ‘ஆன்டி ஐஸ்கிரீம்...’ என்று கையை பிடித்து இழுத்து கொண்டு  என்னை விட மாட்டார்கள். மெனா தியேட்டர் அருகே ஐஸ்கிரீம் வாங்கி கொடுப்பேன். அவர்களோடு சேர்ந்து நானும் ஐஸ் கிரீமை விடுவ தில்லை.
அந்த குழந்தை களோடு போகும்போது அவ்வளவு ஜாலியாக இருக்கும். அடிக்கடி இப்படி ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடக் கூடாது என்று கண்டிப்பார்கள். ஆனால் அவர்கள் நைசாக என்னிடம் வந்து ‘ஆன்டி... ஐஸ்’ என்பார்கள். நான் அப்பாக்களிடம் சண்டை போட்டு குழந்தைகளை ஐஸ்கிரீம் பார்லருக்கு அழைத்து செல்வேன்.

அதை பார்த்ததும் குழந்தை களுக்கு கொண் டாட்டம். குழந்தையை போல் நானும் அவர்களுடன் குதூகலமாகி விடுவேன்.
நான் சின்ன குழந்தையாக இருந்த போது ஐஸ்கிரீம், சாக் லெட்டுகளை பார்த்து ஆசைப் பட்டிருக்கேன். ஆனால் வாங்கித் தருவது யார்...-? வாங்கி தரவில்லை என்பது மட்டு மல்ல. வாங்கும் வசதியும் இல்லை என்பதுதான் உண்மை. 

எனவே குழந் தையாக இருக்கும் போது அவர்கள் ஆசைப் பட்டதை நிறை வேற்றித் தர வேண்டும். என் பிள்ளைகளுக்கு இன்றுவரை அப்படித் தான். அவர்கள் விரும்பி யதை வாங்கி கொடுத்து விடுவேன்.   மேற் சொன்ன நடிகர்கள் வரிசையில் கமல் மாறு பட்டவர். அவரிடம் தாக்கு பிடிப்பது கஷ்டம். அன்று அவர் சொன்னது இன்று நடந்தது. 
அவர் சொன்னது என்ன? நடந்தது என்ன?

ரஜினியை  கட்டிப்பிடி...!

நானும், பிரபுவும் ஜோடியாக நடித்த முதல் படம் தர்மத்தின் தலைவன். ரஜினியுடன் நடித்த முதல் படமும் அதுதான்.
மன்னன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தேன். அந்த படத்தில் ஒரு காட்சியில் ரஜினியுடன் பைக்கில் வருவேன். காட்சிப்படி பைக்கில் வரும்போது ரஜினியை கட்டிப் பிடித்தபடி பின்னால் அமர்ந்து வரவேண்டும்.

ரஜினி சார் பெரிய நடிகர். அவரை கட்டிப்பிடிக்க  எனக்கு தயக்கமாக இருந்தது. அதனால் தோளில் கை போட்டபடி வந்தேன். ஆனால் டைரக்டர் வாசு சாருக்கு முழு திருப்தி வரவில்லை. பலமுறை ‘ரீ டேக்‘ எடுத்தார். அப்படியும் சரியாக வரவில்லை.



ரஜினி, டைரக்டரிடம் ஏன் இந்த தாமதம் என்று விசாரித்து இருக்கிறார். அவர் சொன்னதை காதில் வாங்கிக்கொண்டு ‘குஷ் ஏறு’ என்று சொல்லிவிட்டு அவரது ஸ்டைலில் பைக்கை ஸ்டார்ட் பண்ணினார். டைரக்டரை பார்த்து ‘ரெடியா...? இந்த ஷூட்டிங் ஒழுங்கா வரும் பாருங்க என்ற படி புறப்பட்டார். ஒரு முனை வரை சென்றுவிட்டு திரும்பி வந்தோம். திடீரென்று ஒரு அவசர பிரேக் போட்டார் அவ்வளவுதான். நான் கீழே விழுந்துவிடாமல் இருக்க ரஜினி சாரை இறுக கட்டிப்பிடித்துக் கொண்டேன்.

அதை பார்த்ததும் ரஜினி இதைத்தான் வாசு எதிர் பார்த்தார். இப்போது ஓ. கே. ஆயிருக்கும் பார்! என்றார். அது போலவே டைரக்டரும் ஓ.கே. சூப்பர் என்று பாராட்டினார். 

Tags:    

Similar News