ஆன்மிகம்
வராகி அம்மன்

வளமான வாழ்வருளும் வராகி அம்மன் கோவில்கள்

Published On 2021-01-09 03:47 GMT   |   Update On 2021-01-09 03:47 GMT
அம்மனின் காவல்தெய்வமாகவும், சப்த கன்னியரில் ஒருவராகவும் இருப்பவர், வராகி அம்மன். வராகி அம்மனுக்காக அமைக்கப்பட்டுள்ள கோவில்களை அறிந்து கொள்ளலாம்.
அம்மனின் காவல்தெய்வமாகவும், சப்த கன்னியரில் ஒருவராகவும் இருப்பவர், வராகி அம்மன். திருமாலின் வராக அம்சமாக கருதப்படுபவர் வராகி. இவர் வராகம் என்னும் பன்றி முகமும், எட்டு கரங்களும் கொண்டவர். கருப்பு நிற ஆடை உடுத்தி, சிம்ம வாகனத்தில் அருளும் வராகி, எட்டு வராகிகளாகவும் உள்ளார். மகா வராகி, ஆதி வராகி, சொப்ன வராகி, உன்மத்த வராகி, லகு வராகி, சிம்ஹாருட வராகி, மகிஷாருட வராகி, அச்வாருட வராகி ஆகியோர் அஷ்ட வராகிகள் ஆவர்.

விழுப்புரம் மாவட்டம் சாலாமேடு என்ற ஊரில் அஷ்டவராகி அம்மன் கோவில் உள்ளது. இது வராகி அம்மனுக்காக அமைக்கப்பட்ட முதல் கோவிலாக கருதப்படுகிறது.

தஞ்சாவூர் பெரிய கோவிலில் வராகி அம்மனுக்கு தனிச்சன்னிதி அமைந்துள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் வழுவூர் வீரட்டேஸ் வரர் கோவில், வராகி அம்மன் வழிபட்ட தலமாக சொல்லப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம் செங்கம்பள்ளியில் செரைக்கன்னிமார் கோவில் உள்ளது. இங்கும் வராகி அம்மன் அருள்கிறார்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகில் நரிப்பட்ட என்ற ஊரில் வராகி அம்மனுக்கு ஆலயம் இருக்கிறது.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் சப்த மாதர்கள் கோவில் உள்ளது. இங்கு வராகி அம்மனுக்கு பஞ்சமி திதியில் சிறப்பு பூஜை மற்றும் மகா யாகம் செய்யப்படுகிறது.
Tags:    

Similar News