செய்திகள்
கொடிவேரி அணை

12 நாட்களுக்கு பிறகு கொடிவேரி அணை மீண்டும் இன்று திறப்பு

Published On 2021-04-08 05:24 GMT   |   Update On 2021-04-08 05:24 GMT
கொடிவேரி அணை இன்று காலை திறக்கப்பட்ட தகவல் தெரிந்ததும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக வரத்தொடங்கினர்.
கோபி:

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ளது கொடிவேரி அணை. இங்கு சனி, ஞாயிற்று கிழமைகள் மற்றும் விடுமுறை நாட்களில் உள்ளுர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து அருவியில் குளித்து மகிழ்வார்கள்.

மேலும் அங்கு சுடச்சுட விற்பனை செய்யப்படும் மீன்களையும் வாங்கி சாப்பிட்டு செல்வார்கள். அதுவும் கோடை காலம் தொடங்கி விட்டால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக கொடிவேரி அணையில் குவிய தொடங்குவார்கள்.

இந்த நிலையில் பராமரிப்பு பணிக்காக கடந்த 12 நாட்களாக கொடிவேரி அணை பூட்டப்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யும் தடை விதிக்கப்பட்டது.

இதற்கிடையே கொடிவேரி அணை இன்று காலை மீண்டும் திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் குளிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. 12 நாட்களாக பூட்டப்பட்டு இருந்த கொடிவேரி இன்று காலை திறக்கப்பட்ட தகவல் தெரிந்ததும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக வரத்தொடங்கினர். தற்போது நிலவி வரும் அனல் காற்றில் இருந்து தப்பிக்க அவர்கள் கொடிவேரி அணையில் குளித்து மகிழ்ந்தனர். இதனால் மீன் வியாபாரம் களைகட்டியது.

Tags:    

Similar News