ஆன்மிகம்
அமர்நாத் புனித யாத்திரை

கொரோனா காரணமாக அமர்நாத் புனித யாத்திரை இந்த ஆண்டும் ரத்து

Published On 2021-06-22 03:52 GMT   |   Update On 2021-06-22 03:52 GMT
கொரோனாவின் 2-வது அலை காரணமாக இந்த ஆண்டும் அமர்நாத் யாத்திரை ரத்துசெய்யப்படுவதாகவும், வெறும் அடையாள ரீதியான யாத்திரை மட்டுமே நடைபெறும் எனவும் காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்கா அறிவித்து உள்ளார்.
இமயமலையில் 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத்குகை கோவிலில் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக ஆண்டுதோறும் ஜூலை-ஆகஸ்டு மாதங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

சுமார் 2 மாதங்கள் நடைபெறும் இந்த புனித யாத்திரையில் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு இந்த யாத்திரை ரத்து செய்யப்பட்டது.

இந்தநிலையில் கொரோனாவின் 2-வது அலை காரணமாக இந்த ஆண்டும் அமர்நாத் யாத்திரை ரத்துசெய்யப்படுவதாகவும், வெறும் அடையாள ரீதியான யாத்திரை மட்டுமே நடைபெறும் எனவும் காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்கா அறிவித்து உள்ளார்.
Tags:    

Similar News