ஆன்மிகம்
திண்டுக்கல் நாகல்நகர் பள்ளிவாசலில் கந்தூரி விழாவில் 25 ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்கப்பட்ட காட்சி.

திண்டுக்கல் நாகல்நகர் பள்ளிவாசலில் கந்தூரி விழா

Published On 2021-02-15 02:55 GMT   |   Update On 2021-02-15 02:55 GMT
திண்டுக்கல் நாகல்நகரில் புதிதாக கட்டப்பட்ட பள்ளிவாசலில் நபிகள் நாயகம் பெயரில் கந்தூரி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் 25 ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது.
திண்டுக்கல் நாகல்நகரில் புதிதாக கட்டப்பட்ட பள்ளிவாசலில் நேற்று நபிகள் நாயகம் பெயரில் கந்தூரி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் அனைத்து மதத்தினருக்கும் பிரியாணி விருந்து வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று பள்ளிவாசல் வளாகத்தில் 2½ டன் அரிசி மற்றும் இறைச்சி ஆகியவை மூலம் பிரியாணி சமைக்கப்பட்டது. பின்னர் அந்த பிரியாணியை திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 25 ஆயிரம் பேருக்கு பள்ளிவாசல் நிர்வாகிகள் வழங்கினர்.

இதற்கான ஏற்பாடுகளை நாகல்நகர் பள்ளிவாசல் தலைவர் அஹமது புகாரி, செயலாளர் அலாவுதீன், பொருளாளர் சவுக்கத் அலி உள்பட பலர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News