தொழில்நுட்பம்
பி.எஸ்.என்.எல்.

தினமும் 5 ஜி.பி. இலவச டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்.

Published On 2020-03-21 10:30 GMT   |   Update On 2020-03-21 09:06 GMT
பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற உதவும் நோக்கில் 5 ஜி.பி. இலவச டேட்டாவினை வழங்குகிறது.



இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கையை சவாலாக்கி இருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக பல நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றி வருகின்றனர். நாடு முழுக்க இதே நிலை தான் நீடித்து வருகிறது.

வீட்டில் இருந்து பணியாற்றும் அனைவரிடமும் சீரான இணைய வசதி இருக்குமா என்பது கேள்விக்குறியான விஷயமே. அந்த வகையில் வாடிக்கையாளர்களுக்கு கைகொடுக்கும் வகையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் 5 ஜி.பி. டேட்டாவினை இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளது. 



புதிய சலுகையை பி.எஸ்.என்.எல். ‘Work@Home’ என அழைக்கிறது. இது பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இதில் பயனர்களுக்கு தினமும் 5 ஜி.பி. டேட்டா நொடிக்கு 10 எம்.பி. வேகத்தில் வழங்கப்படுகிறது. பி.எஸ்.என்.எல். வழங்கும் 5 ஜி.பி. டேட்டா முற்றிலும் இலவசம் ஆகும். 5 ஜி.பி. டேட்டா தீர்ந்ததும், டேட்டா வேகம் குறைக்கப்பட்டு நொடிக்கு 1 எம்.பி. வேகத்தில் இணைய சேவை வழங்கப்படுகிறது.

புதிய திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற பி.எஸ்.என்.எல். ஊக்குவிக்கிறது. இதனால் கொரோனா வைரஸ் மற்றும் அதுபற்றிய போலி தகவல்கள் பரவுவதை தடுக்க முடியும்.

கொரோனா வைரஸ் பாதிப்படைந்து உலகளவில் இதுவரை சுமார் 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
Tags:    

Similar News