செய்திகள்
ஜாஃப்ரா ஆர்சர், சங்கக்கரா

ஜாஃப்ரா ஆர்சர் உடனடியாக திரும்ப அவசரம் காட்டமாட்டோம்: குமார் சங்கக்கரா

Published On 2021-04-12 10:32 GMT   |   Update On 2021-04-12 10:32 GMT
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜாஃப்ரா ஆர்சர்> கையில் ஏற்பட்ட காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த 9-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜாஃப்ரா ஆர்சர் இடம் பிடித்துள்ளார். இவர் பந்து வீச்சில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது அவருக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டது. அதற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். மேலும், மீன் தொட்டி உடைந்து கையில் கண்ணாடி துண்டு நீண்ட நாட்களாக இருந்துள்ளது. அதையும் அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக முதல் பாதி தொடரில் அவர் பங்கேற்க வாய்ப்பில்லை. அவர் இல்லாதது அந்த அணிக்கு மிகப்பெரிய இழப்பாகவே கருதப்படுகிறது. இருந்தாலும் அவரது விசயத்தில் அவசரம் காட்டமாட்டோம் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள குமார் சங்கக்கரா தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து சங்கக்கரா கூறுகையில் ‘‘தொடக்க போட்டிகளில் ஜாஃப்ரா ஆர்சர் இடம் பெறாதது எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு. அவரை சுற்றி ஏராளமான திட்டங்கள் வைத்திருந்தோம். ஆனால், ஐபிஎல் போட்டியின் சில பகுதியில் அவர் பங்கேற்பார் என்பதை உறுதியாக நம்புகிறோம். எங்களிடம் தற்போதைக்குரிய திட்டங்கள் உள்ளன. அவரது விசயத்தில் அவசரம் காட்டமாட்டோம்’’ என்றார்.
Tags:    

Similar News